கிணற்றுக்குள் விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு
கிணற்றில் விழுந்த காட்டெருமை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டெருமைகள் நகர்ப்பகுதிகளில் அடிக்கடி உலா வருவதும்,குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும்,அவ்வப்போது மனிதர்களையும் தாக்குவதும் வாடிக்கையாக உள்ளது,
இந்த நிலையில் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அட்டுவம்பட்டி பகுதியில் உள்ள தனியார் இடத்திற்கு வந்த காட்டெருமை ஒன்று அப்பகுதியில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளது,இதனை பார்த்த அப்பகுதியினர் வனத்துறையிடம் தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொடைக்கானல் வனத்துறையினர் கிணற்றில் சிக்கிக்கொண்ட காட்டெருமையை மீட்பதற்கு கிணற்றின் கரையோரத்தை அகலப்படுத்தி சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டனர்,
இதனை தொடர்ந்து கிணற்றில் இருந்து வெளியேறிய காட்டெருமை வனப்பகுதிக்குள் ஓடியது,இதனால் இப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது,இதனை வனத்துறை கவனம் செலுத்தி நகர்ப்பகுதி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் காட்டெருமைகளை வனத்துறை தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடையே வேண்டுகோள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.