புதுக்கோட்டையில் இரத்ததான முகாம்

புதுக்கோட்டையில் இரத்ததான முகாம்

பேரணியில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டையில் இரத்ததான முகாம் நடைபெற்றது

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ரத்ததான கழக மாநிலங்களின் பேரணி மனிதநேயர் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. திலகர் திடலில் இருந்து தொடங்கிய பேரணியை கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை தொடங்கி வைத்தார்.

ஏராளமானார் பங்கேற்ற இந்த பேரணி வடக்க ராஜ வீதி, மேல ராஜ வீதி, அண்ணா சிலை வழியாக சின்ன பாப்பாவில் நிறைவடைந்தது. இங்கு நடைபெற்ற மனித நேயர் விழா பொதுக்கூட்டத்துக்கு வாலிபர் சங்கம் மாநிலத் தலைவர் எஸ் கார்த்திக் தலைமை வகித்தார். மத்திய குழு உறுப்பினர் எம் ஷாஜர் கந்தர்வகோட்டை எம்எல்ஏ எம். சின்னதுரை சங்கத்தின் மாநில செயலர் ஏ.வி. சிங்காரவேலன்,

பொருளாளர் எஸ்.பாரதி, துணை தலைவர்கள் எஸ். மணிகண்டன், எம்.பிரியங்கா, எல்.பி.சரவணன், துணை செயலாளர் மகாதீர் நன்றி கூறினார்.

Tags

Next Story