குழித்துறையில் அரசு பேருந்தில் போல்ட் நட்டு கழன்று ஓடியதால் பரபரப்பு

குழித்துறையில் அரசு பேருந்தில் போல்ட் நட்டு கழன்று ஓடியதால் பரபரப்பு

நட்டு கழன்று ஓடிய பேருந்து 

குழித்துறையில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் பின்பக்க சக்கரத்தின் நட்டு மட்டும் போல்ட்டுகள் கழன்று தாறுமாறாக ஓடிய பேருந்தை ஓட்டுநர் துரிதமாக செயல்பட்டு நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

குமரி மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் அனைத்தும் முறையான பராமரிப்பு இல்லாமல் இயக்கப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்து வருவதாக தொடர் குற்றச்சாட்டுகள் இருந்து வரும் நிலையில் மார்த்தாண்டம் பணிமனையில்,

இருந்து இன்று பனச்சமூடு பகுதிக்கு சென்று அங்கிருந்து பள்ளி மாணவ மாணவிகள் உட்பட ஏராளமான பயணிகளை ஏற்றிக்கொண்டு மார்த்தாண்டம் நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று குழித்துறை சந்திப்பில் வந்த போது பேருந்தின் பின்பக்க சக்கரத்தின் போல்டு நட்டுகள் தானாக கழன்று பேருந்து தாறுமாறாக ஓடி உள்ளது.

இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சத்தம்போட்டு கத்தி கூச்சலிட பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையின் நடுவே பாதுகாப்பாக நிறுத்தினார்.எதிரில் வாகனங்கள் ஏதும் வராததால் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.மேலும் பேருந்தில் பயணம் செய்த பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பயணிகள் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர்.

இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் பொதுமக்கள்.

Tags

Next Story