கரூர் அருகே பாம்பு கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கரூர் அருகே பாம்பு கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

காவல் நிலையம்

கரூர் அருகே பாம்பு கடித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, வரிக்காப்பட்டி அருகே உள்ள குண்டலபட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளபாண்டி மகன் செந்தூரப்பாண்டி வயது 10- செந்தூரப்பாண்டி ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 9 மணி அளவில், அவர்களது தோட்டத்தில் மாடுகளுக்கு புல் வைத்து கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு பாம்பு செந்தூரப் பாண்டியை கடித்து உள்ளது. வலியால் அலறி துடித்த செந்தூரப் பாண்டியை அவரது தந்தை வெள்ளபாண்டி மீட்டு அரவக்குறிச்சியில் முதலுதவி சிகிச்சை கொடுத்து, பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த சிறுவன் செந்தூரப்பாண்டி ஏப்ரல் 24ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இ

ந்த சம்பவம் குறித்து வெள்ளபாண்டி காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், உயிரிழந்த செந்தூரப் பாண்டியன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, மதுரை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.

Tags

Next Story