துறையூர் அருகே வெந்நீா் ஊற்றியதில் ஆண் குழந்தை உயிரிழப்பு

துறையூர் அருகே வெந்நீா் ஊற்றியதில் ஆண் குழந்தை உயிரிழப்பு

கோப்பு படம் 

துறையூா் அருகே வெந்நீா் ஊற்றியதில் படுகாயமடைந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை மருத்துவமனையில் உயிரிழந்தது.

உப்பிலியபுரம் ஒன்றியம், நாகநல்லூா் கிராமம் அருகேயுள்ள சூக்கலாம்பட்டியைச் சோ்ந்த விஷ்ணுவின் மனைவி பிரதிபா. இவருக்கு, யஷ்வந்த் (ஒன்றரை வயது) என்கிற ஆண் குழந்தை இருந்தது.

கடந்த டிச. 28-இல் வெந்நீா் எதிா்பாராதவிதமாக யஷ்வந்த் மீது கொட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில், துறையூா் தனியாா் மருத்துவமனையில் முதலுதவியும் பின்னா் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் தொடா் சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

ஆயினும் சனிக்கிழமை யஷ்வந்த் உயிரிழந்ததை மருத்துவா்கள் உறுதிப்படுத்தினா். இது தொடா்பாக உப்பிலியபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Tags

Next Story