தண்ணீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து சிறுவன் பலி
உயிரிழந்த சிறுவன்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தில் இரண்டரை வயது சிறுவன் தண்ணீர் தொட்டி கட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார். தொரப்பாடி கிராமத்தில் வசித்து வரும் பன்னீர்செல்வம்- ஷாலினி தம்பதிக்கு 2 1/2 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று அவரது வீட்டின் அருகே அவர்களது மகன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அதே பகுதியில் தோண்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். மகனை காணாமல் பெற்றோர் தேடிய நிலையில் தண்ணீர் தொட்டி அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இரண்டரை வயது சிறுவன் இறந்ததது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story