பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

நரசிங்கராயர் தெரு சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சரிசெய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.


நரசிங்கராயர் தெரு சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீரை சரிசெய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் பத்ரகாளியம்மன் கோவில் தெரு, நரசிங்கராயர் தெரு சந்திப்பில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது. இதனால், அப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. நீண்ட நேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் சூழல் உள்ளது. எனவே, பத்ரகாளியம்மன் கோவில் தெரு, நரசிங்கராயர் தெரு சந்திப்பில், குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story