பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

பிரதான குழாயில் உடைப்பு காஞ்சியில் வீணாகும் குடிநீர்

அரசமரம் தெருவில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரசமரம் தெருவில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சி மாநகராட்சியில் உள்ள 51வது வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட பைப்லைன் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சின்ன காஞ்சிபுரம், அரச மரம் தெருவில், நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு, 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதன் அருகில் உள்ள 'மேன்ஹோல்' வழியாக பாதாள சாக்கடைக்குள் கலந்து, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மேலும், குடிநீர் கசியும் இடத்தில் சாலையும் சேதமடைந்துள்ளது. கோடைகாலம் துவங்கியதில் இருந்தே, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், காஞ்சிபுரத்தில் குடிநீரை வீணடிப்பதாக புகார் எழுந்து உள்ளது. எனவே, அரசமரம் தெருவில், பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story