பிரேத பரிசோதனை செய்ய லஞ்சமா !

பிரேத பரிசோதனை செய்ய லஞ்சமா !

சாலைமறியல்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி சாலைமறியல். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கை கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தை சேர்ந்த ப்ரியா என்பவருக்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. இந்நிலையில் சம்பவதன்று கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ப்ரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையறிந்த குன்னம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் பிப்ரவரி 01 ஆம் தேதி மாலை வரை பிரேத பரிசோதனை செய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், மேலும் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு அப்பெண்ணின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்த அரியலூர் நகர காவல் துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக கூறியதையடுத்து சாலைமறியல் கைவிடபட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story