தேனாற்றில் பாலம் அமைக்கணும் !

காரைக்குடியில் உள்ள செஞ்சை -- சங்கந்திடலில் உள்ள தேனாற்றில் பாலம் அமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்குடியில் உள்ள செஞ்சை -- சங்கந்திடலில் உள்ள தேனாற்றில் பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்து வருகின்றனர். காரைக்குடியில் பழமையான பகுதியாக செஞ்சை மற்றும் சங்கந்திடல் பகுதி உள்ளது. சங்கந்திடலில் ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக விவசாய பணிகள் நடந்து வருகிறது. இந்த விவசாய வேலைக்காகவும் வெளியூர் செல்வதற்கும் செஞ்சை பகுதி மக்கள் சங்கந்திடல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செஞ்சை - சங்கந்திடல் சாலையின் இடையே தேனாறு உள்ளது. மழைக்காலங்களில் தேனாற்றில் தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் இவ்வழியை பயன்படுத்த முடியாமல் பல மைல் தூரம் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது. இதனால் செஞ்சை - சங்கந்திடல் இடையே இணைப்பு பாலம் கட்ட வேண்டும் என கடந்த 20ஆண்டாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை பாலம் கட்டப்படவில்லை என மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story