விபத்தில் பலியான எருமை சாலையில் கிடந்த அவலம் !
விபத்தில் பலியான எருமை
சாலையை கடந்த எருமை மாடு ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், நேற்று அதிகாலை சாலையை கடந்த எருமை மாடு ஒன்று, அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தது. இதுகுறித்து தகவல் தெரிவித்தும், நெடுஞ்சாலை துறையினர், போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், மாலை வரை சாலையில் உயிரிழந்து கிடந்த மாட்டை அகற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்ககவில்லை. விபத்தில் சிக்கி பலியான எருமை மாடு, நேரம் செல்ல செல்ல துர்நாற்றம் வீசத் துவங்கியது. நாள் முழுக்க சாலையில் கிடந்த எருமையை உரிமையாளர்களோ, அதிகாரிகளோ கண்டுகொள்ளாதது, வாகன ஓட்டிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
Next Story