வாலாஜா அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலி

வாலாஜா அருகே பைக் மோதி கட்டிட மேஸ்திரி பலி

வாலாஜா மருத்துவமனை

வாலாஜா அருகே டூவீலர் விபத்தில் கட்டிட மேஸ்திரி உயிரிழந்த சம்பவம் குறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த தலங்கை கிராம பிராமணர் தெருவை சேர்ந்தவர் கட்டிட மேஸ்திரி ராமன் (48).இவர், வாலாஜாவை நோக்கி டூ வீலரில் சென்றார். அப்போது பின்னால் வந்த டூ வீலர் திடீரென ராமன் ஓட்டிச் சென்ற டூ வீலர் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயம் அடைந்த ராமன் சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story