பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயம்
மாட்டு வண்டி பந்தயம்
திருமயம் அருகே உள்ள ஈழக்குடிபட்டியில் சோழாத்தா கோவில் , சோழ பிராட்டி அம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் சாலையில் துள்ளிக் குதித்து சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலையோரத்தில் நின்று ஆரவாரத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்.மாட்டுவண்டி பந்தயத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஈழக்குடிபட்டி சோழாத்தா கோவில் சோழபிராட்டி அம்மன் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்த போட்டி சிறியமாடு,பெரியமாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 29ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டியில் 12மாட்டு ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 17 மாட்டு வண்டி ஜோடிகளும் கலந்து கொண்டன. பெரிய மாட்டு வண்டிக்கு பாப்பாத்தி ஊரணி வரை 9கிலோ மீட்டருக்கும் சிறிய மாட்டு வண்டிக்கு வெங்களூர் விளக்கு வரை 6 கிலோமீட்டர் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது.
சாலையில் துள்ளிக்குதித்தும் ஒன்றையொன்றுமுந்திச்சென்ற போட்டியைக்காண போட்டி போட்டுக் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை சாலையில் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் சாலையில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்த மாட்டுவண்டி ஜோடிகள் ஒன்றையொன்று முந்திச் சென்ற காட்சி பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளித்தது.