குண்டும் குழுயுமாக உள்ள சாலை

வேப்பனஹள்ளியில் குண்டும் குழுயுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைகின்றனர்.

ஆண்டுகளாக குண்டும் குழுயுமாக உள்ள சாலையால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி மனவாரணபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லப்பள்ளி மற்றும் காசிருக்கானபள்ளி கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டு 15 வருடங்களுக்கு மேலாகியுள்ளது. இந்த நிலையில் சுமார் 2 கிலோ மீட்டர் சாலை முழுவதும் தார் சாலை முழுவதும் பெயர்ந்து குண்டம் குழியுமாக ஜல்லிக்கற்களுடன் உள்ளதால் மாணவ மாணவிகள் முதல் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் கூட கிராமத்திற்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. பல ஆண்டுகளாக தார் சாலை சீரமைத்து கொடுக்க அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு வருகின்றனர். உடனடியாக பல ஆண்டுகளாக சாலை இல்லமால் கிராம மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் உடனடியாக கிராமத்திற்கு புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags

Next Story