ராமநாதபுரம் கடற்கரையில் ஒதுங்கிய கஞ்சா மூட்டை

தனுஷ்கோடி பழைய பாலம் கடற்கரை பகுதியில் கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக அப்பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

ராமநாதபுரம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பழைய பாலம் கடற்கரை பகுதியில் கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்கி உள்ளதாக அப்பகுதிக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் கஞ்சா மூட்டைகளை சேகரித்து எடை போட்டதில் 22 கிலோ கஞ்சா மூட்டைகள் கரை ஒதுங்கியது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சா மூட்டைகள் இலங்கைக்கு கடத்தும் போது கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து வந்ததின் காரணமாக கடலில் தூக்கி வீசினார்களா அல்லது கடத்தி செல்வதற்காக கடற்கரை ஓரத்தில் பதுக்கி வைத்திருந்தார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story