யானைக்கால் நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம்
முகாம்
யானைக்கால் நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நகர பகுதிகளில் உள்ள யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் கிருபா தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, இளநிலை பூச்சியியல் வல்லுநர்கள் சரவணன், சிட்டிபாபு ஆகியோர் யானைக்கால் நோயாளிகள் 13 பேர்களுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கினர். மேலும் யானைக்கால் நோய் அறிகுறிகள் சிகிச்சை முறைகள் நோய் தடுப்பு முறைகள் நோயினால் பாதிக்கப்பட்ட கால்கள் கைகள் ஆகியவற்றை சுகாதாரமாக பராமரிக்கும் முறைகள் குறித்து நோயாளிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி நகர்ப்புற யானைக்கால் நோய் திட்ட சுகாதார ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் நகர்ப்புற சுகாதார ஆய்வாளர்கள் விக்னேஸ்வரன், வசந்தன், கவியரசன், பாலா ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story