வாக்கிங்கில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

வாக்கு சேகரிப்பு

புதுக்கோட்டை உழவர் சந்தையில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்த அதிமுக வேட்பாளர் கருப்பையா.
திருச்சிராப்பள்ளி நாடாளுமன்ற தொகுதியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ப.கருப்பையா அவர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்து புதுக்கோட்டை உழவர் சந்தை பகுதியில் நடை பயணமாக சென்றார். அப்பொழுது, திருச்சி நாடாளுமன்ற தொகுதியை சார்ந்த அனைத்து பகுதிகளுக்கும் தான் அடிக்கடி நேரில் வந்து மக்கள் குறைகளை கேட்டு இருந்து உங்கள் குரலாய் நாடாளுமன்றத்தில் ஒலிக்க செய்வேன் என்று கூறி வாக்குகள் சேகரித்தார்.
Next Story


