வாக்கு சேகரிப்பின் போது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய வேட்பாளர்

வாக்கு சேகரிப்பின் போது பெண் குழந்தைக்கு பெயர் சூட்டிய வேட்பாளர்

வாக்கு சேகரிப்பு


குண்டலபட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்கச் சென்றபோது பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி அங்கு பெண் குழந்தைக்கு பெயர் சூட்டினார் இதனால் பாமகவினர் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்பு மணி ராமதாசின் மனைவியும், பசுமை தாயகத்தின் தலைவருமான சவுமியா அன்புமணி பா.ம.க. வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று அவர் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்குட்பட்ட குண்டலப்பட்டி கிராமத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் சங்கீதா தம்பதியினர் தங்களது பெண் குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து பெண் குழந்தையை பிரசார வேனுக்கு அழைத்து வந்ததும், குழந்தையை தூக்கி கொஞ்சியதோடு, அக்குழந்தைக்கு 'தென்றல்' என பெயர் சூட்டி வாழ்த்தினார். இதைப் பார்த்த கட்சி தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags

Next Story