விழுப்புரத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் பாய்ந்த கார்

விழுப்புரத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் பாய்ந்த கார்

பள்ளத்தில் கவிந்த கார்

விழுப்புரத்தில் பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்து ஆற்றில் பாய்ந்த காரில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 36). இவர் சொந்த வேலை காரணமாக ஒரு காரில் கும்பகோணத் தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். காலை விழுப்புரம் அருகே மாதிரிமங்கலம் பம்பை ஆற்று பாலத்தில் கார் சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென கலைவாணனின் கட்டுப் பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பம்பை ஆற்றுக்குள் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் இல்லாத இடத்தில் கார் பாய்ந்ததில் காரின் பின்பகுதி சேதமடைந்தது. மேலும் காரை ஓட்டிச்சென்ற கலைவாணன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று கலைவாணனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மீட்பு வாகனத்தை போலீசார் வரவழைத்து விபத்துக்குள்ளான காரை ஆற்றில் இருந்து மீட்டனர். தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story