செங்கல்பட்டு அருகில் இரவில் தீப்பற்றி எரிந்த கார்

செங்கல்பட்டு அருகில் இரவில் தீப்பற்றி எரிந்த கார்
X
செங்கல்பட்டு அருகில் இரவில் தீப்பற்றி எரிந்த கார்...
வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு அடுத்த மகேந்திரா சிட்டி அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பெத்துன்னா வெங்கையா, 46. மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில் இஞ்சினியராக உள்ளார். இவர், நேற்று இரவு, வீட்டில் இருந்து தன் 'ஐ20 ஹுண்டாய்' காரில் சென்ற போது, வீட்டின் அருகிலேயே காரின் முன் பக்கத்தில் இருந்து, திடீரென தீப்பற்றி எரிந்தது. உடனடியாக, பெத்துன்னா வெங்கையா காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். அக்கம் பக்கத்தினர் மகேந்திரா சிட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இச்சம்பவம் குறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Tags

Next Story