பொன்னேரி பகுதியில் சாலையின் ஓரத்தில் தீப்பற்றி எரிந்த கார்!

பொன்னேரி பகுதியில் சாலையின் ஓரத்தில் தீப்பற்றி எரிந்த கார்!


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியின் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியின் சாலையின் ஓரத்தில் கார் ஒன்று தீப்பற்றி எரிந்தது.

திருப்பத்தூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் சாலையின் ஓரத்தில் தீப்பற்றி எரிந்த கார்! வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பகுதியின் சாலையின் ஓரத்தில் வாணியம்பாடி வழியாக திருப்பத்தூர் நோக்கி சென்ற ஸ்கார்பியோ கார் ஒன்று இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென புகை வந்தது.

அதன்பின்னர் காரின் உரிமையாளர் காரை நிறுத்திவிட்டு வெளியே வந்து பேனட்டை தூக்கி பார்த்தபோது தகதகவென தீப்பற்றி எரிந்தது பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தீயணைப்பான கருவி மற்றும் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து காரின் உரிமையாளர் தீயை அணைத்தார். பின்னர் ரெக்கவரி காரின் மூலம் மீட்டு தீப்பற்றி எரிந்த காரை உரிமையாளர் பழுது பார்க்க கொண்டு சென்றார். இதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பரவச் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story