டூவீலர் மீது கார் மோதி விபத்து
வாக்கு சேகரிப்பு
டூவீலர் மீது கார் மோதி விபத்து. இருவர் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுக்கா, மாயனூர் அங்குநகர் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி வயது 50. அதே பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் வயது 35. இவர்கள் இருவரும் ஏப்ரல் 12ஆம் தேதி இரவு 7 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில், அவர்களுக்கு சொந்தமான டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் மாயனூர் அங்குநகர் அருகே சென்றபோது, எதிர் திசையில், கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம், லாரன்ஸ் ஸ்கூல் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரேசி டேவிட் வயது 61 என்பவர் ஓட்டி வந்த இன்னோவா கார், சதீஷ்குமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது, நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சதீஷ்குமார் மற்றும் சிவசாமி ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவர்கள் மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள ரஜினிகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவசாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய, பிரேசி டேவிட் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.
Next Story