டூவீலர் மீது கார் மோதி விபத்து
அரவக்குறிச்சி டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தந்தை, மகன் படுகாயமடைந்தனர்.
டூவீலர் மீது கார் மோதி விபத்து. தந்தை, மகன் படுகாயம். காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, தொக்குப்பட்டி புதூர் அருகே உள்ள கருங்கல்புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் வயது 45. இவரது மகன் புவனேஷ் வயது 9. இவர்கள் இருவரும் மே 18ஆம் தேதி காலை 8- மணி அளவில், சின்ன தாராபுரத்தில் இருந்து தென்னிலை செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் கருநெல்லிவலசு பிரிவு அருகே வந்தபோது, அதே சாலையில் கரூர், தாந்தோணிமலை, காமராஜ் நகர், 3வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த இளஞ்செழியன் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், ரமேஷ் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டூவீலருடன் கீழே விழுந்ததில் ரமேஷ் மற்றும் புவனேஷ் ஆகிய இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ரமேஷ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளஞ்செழியன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.
Next Story