இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - முதியவர் பலி

இருசக்கர வாகனம் மீது கார் மோதி  விபத்து - முதியவர் பலி
X
காவல் நிலையம் 
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரெங்கசாமி 70., இவர் நேற்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாடாலூர் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றார். அங்கு சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ரெங்கசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரெங்கசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story