வெள்ளையனை அருகே கார் மூதாட்டி மீது மோதி விபத்து

வெள்ளையனை அருகே கார் மூதாட்டி மீது மோதி விபத்து

மருத்துவ கல்லூரி

வெள்ளையனை அருகே கார் மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளனது.

கரூர் மாவட்டம், வெள்ளியணை, தாழியாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன் மனைவி மலையம்மாள் வயது 60. இவர் மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில், வெள்ளியணை 4- ரோடு பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டு இருந்தார்.

அப்போது மதுரை மாவட்டம், வைத்தியநாதபுரம், சிங்கம்பிடாரி கோவில் தெருவை சேர்ந்த அழகர்சாமி மகன் கண்ணன் என்பவர், அவரது டாடா சுமோ வாகனத்தை 4- ரோடு சாலையில் ரிவர்ஸ் எடுத்து கொண்டு இருந்தார். ரிவர்ஸ் எடுக்கும்போது, தேவையான சிக்னல்களை அவர் வெளிப்படுத்தவில்லை. மேலும், சாலையோரம் நின்ற மலையம்மாளை கவனிக்காமல், ரிவர்ஸ் எடுக்கும்போது வேகமாகச் சென்று அவர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த மலையம்மாளுக்கு மார்பு மற்றும் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மலையம்மாள் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக, சிக்னலை வெளிப்படுத்தாமல், காரை விபத்து ஏற்படும் வகையில் ஒட்டிய கண்ணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.

Tags

Next Story