கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய கார்

கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது மோதிய கார்

கன்னியாகுமரியில் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பெண் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.


கன்னியாகுமரியில் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது கார் மோதியதில் 2 பெண் பக்தர்கள் படுகாயம் அடைந்தனர்.
வைகாசி விசாக நாளை முன்னிட்டு நேற்று முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து பாதயாத்திரை ஆக சென்று வருகின்றனர். அந்த வகையில் ஆரல்வாய்மொழி வழியாக ஏராளமான பக்தர்கள் குழுவாக பாதயாத்திரை சென்றனர். ஆரல்வாய்மொழி அடுத்த கூட்டுறவு நூற்பாலை அருகே ஒரு பாதயாத்திரை குழுவினர் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இதில் நாகர்கோவில், பட்டகசாலியன் விளையைச் சேர்ந்த கனகசபாபதி மனைவி விஜயாம்பிகா (64) வடசேரி வணிகர் தெருவை சேர்ந்த மீனாட்சி (44) ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை சக பக்தர்கள் மீட்டு நாகர்கோவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த பணகுடியை சேர்ந்த வில்சன் (49) என்பவர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags

Next Story