மண் குவியலில் பாய்ந்த கார்
குமாரபாளையம் அருகே வேகமாக வந்த வாடகை கார் மண் குவியலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலையில் கத்தேரி பிரிவு, எஸ்.எஸ்.எம் கல்லூரி அருகே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அதற்காக இரு மாதங்கள் முன்பு பணிகள் துவங்கியது. டிச. 8 முதல் புறவழிச்சாலையில் வரும் வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. எதிர்மேடு பகுதியில் சர்வீஸ் சாலையில் திருப்பி விடும் இடத்தில் நேற்று அதிகாலை 04:00 மணியளவில் வேகமாக வந்த வாடகை கார் ஒன்று, எச்சரிக்கை விளக்கு, தடுப்புகள் தாண்டி, மண் குவியலில் பாய்ந்து நின்றது. அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கார் ஓட்டுனரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story