ஆத்தூர் : 5 அடி பள்ளத்தில் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் வடசென்னிமலை முருகன் கோவில் சதாபரண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பும் போது ஐந்து அடி பள்ளத்தில் ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து 12 பேர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தபினார்கள்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருத்தேர் விழா நடைபெற்று முடிந்த நிலையில் நிறைவு நாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிய 12 பேர் சரக்கு ஆட்டோவில் சென்ற போது எதிர்பாராத விதமாக ஐந்து அடி பள்ளத்தில் சரக்கு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது ஈடுபாடுகளில் சிக்கிய 12 பேரை தீயணைப்புத் துறையினர் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story