மண்டைக்காடு புதூரில் பாதிரியார் உட்பட 17 பேர் மீது வழக்கு

X
வழக்குப்பதிவு
மண்டைக்காடு புதூரில் பாதிரியார் உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு புதூர் மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன். கடலில் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் 2 பேரை கருங்கல் போலீஸ் நிலையத்தில் வழக்கு சம்பந்தமாக போலீசார் பிடித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் வில்சன், சோனி என்ற டின்சன் பெட்ரோனிக், ஆரோக்கியம் அலாட் ஆகியோர் சம்பவ தினம் புதூர் கிறிஸ்தவ ஆலய பாதிரியார் அலுவலகத்திற்கு முறையிட சென்றனர். அப்போது அங்கு வந்த பெனட் (45) என்பவரிடம் போலீஸ் பிடித்து சென்றவர்கள் குறித்து பங்குப்பேரவையினர் யாரும் கேட்கவில்லை என்று முறையிட்டார்கள். அதற்கு பெனட், அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பதில் கூறினாராம். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினர்களாக மோதிக்கொண்டனர். இதில் படுகாயம் அடைந்த பெனட் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியிலும், மற்றொரு தரப்பை சேர்ந்த சுரேஷ், ஜான் பிரிட்டோ ஆகிய இரண்டு பேர் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக மண்டைக்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் ஆலய பாதிரியார் அமல்ராஜ் என்பவர் உட்பட இரு தரப்பினை சேர்ந்த 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
