தலைமை காவலரிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேர் மீது வழக்கு
தலைமை காவலரிடம் தகராற்றில் ஈடுப்பட்டவர்கள் மீது வழக்குபதிவு
தர்மபுரி மாவட்டம், பத்தனபள்ளியில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த நபர்கள் தலைமை காவலரிடம் தகராறு, ஐந்து பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பத்தனப்பள்ளி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக ரகசிய தகவல் கிடைத் தது. அதன்பேரில் தலைமைக் காவலர் பிரேம்தாஸ் சம்பவ இடத்துக்கு சென்று, அங்கு மது விற்றவர்க ளிடம் இருந்து 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள், தலைமை காவலரை தகாத வார்த்தையால் திட்டி தகராறு செய்தனர். இதுகுறித்து பிரேம்தாஸ், காரிமங்க லம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் ஏட்டுவை தகாத வார்த்தையால் திட்டிய செல்வமணி , சம்பத், செல்லத்துரை, சின்னச்சாமி,ஜெகதீசன்,ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவர்களை தேடி வருகின்றனர்.
Next Story