அரசு பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு!

அரசு பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவர் மீது வழக்கு!

விசாரணை

சாத்தான்குளம் அருகே அரசு பேருந்து டிரைவரை தாக்கியதாக லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இருந்து அமுதுண்ணாகுடி வழியாக நெல்லை நோக்கி நேற்று காலை அரசு பேருந்து புறப்பட்டு சென்றது. ஆழ்வார்திருநகரி அருகேயுள்ள மழவராயநத்தம் பகுதியை சேர்ந்த ராஜப்பா என்பவர் டிரைவர் பணியில்இருந்தார்.

அமுதுண்ணாகுடி சி.எஸ்.ஐ. சர்ச் அருகே சென்றபோது அமுதுண்ணாகுடியை சேர்ந்த அர்ஜுனன்(40) என்பவர் போக்கு வரத்துக்கு இடையூறாக மதுபோதையில் சாலையில் பைக்குடன் நின்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் பைக்கை அங்கிருந்துஅப்புறப்படுத்துமாறு அரசு பேருந்து டிரைவர் ராஜப்பா கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அர்ஜுனன், பேருந்தில் ஏறி டிரைவர் ராஜப்பாவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர்சாத்தான் குளம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலில் ஈடுபட்ட அர்ஜுனன், சென்னையில் லாரிடிரைவராக உள்ளார்.

இதுகுறித்து அரசு பேருந்து டிரைவர் ராஜப்பா அளித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் தலைமை காவலர் முருகேசன் வழக்குப்பதிவு செய்தார். காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன், உதவி ஆய்வாளர் நாகராஜன் விசாரணை நடத்தி லாரி டிரைவரை அர்ஜுனனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story