அரசு பஸ் மீது விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு
விபத்து
விழுப்புரம் அருகே அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் அருகே அரசு பஸ் மீது மோதி விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் தென்னரசு(57) இவர், அரசு பஸ் டிரைவர். இவர், கடந்த 17ம் தேதி, சேலத்திலிருந்து, சென்னை நோக்கி அரசு பஸ்சை ஓட்டி வந்தார். விழுப்புரம் பைபாஸ் அருகே அந்த பஸ் வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று, மோதி விபத்துக்குள்ளானது. இதனால் அரசு பஸ்சின் பின் பகுதி சேதமடைந்தது. இதுகுறித்து தென்னரசு கொடுத்த புகாரின் பேரில், கன்டெய்னர் லாரி டிரைவர் சீனுவாசன் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்தனர்.
Next Story