மரங்களை வெட்டிய ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

மரங்களை வெட்டிய ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

மரங்களை வெட்டிய ஊராட்சி தலைவியின் கணவர் மீது வழக்கு

எருக்கம்பட்டு கிராமத்தில் அரசு புறம்போக்கு இடத்திலிருந்த மரங்களை வெட்டிய ஊராட்சித் தலைவியின் கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள எருக்கம்பட்டு கிராமத்தில் மெயின் ரோட்டில் அரசு பாதை புறம்போக்கு இடத்தில் 4 மரங்கள் இருந்தன. எருக்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி ராணியின் கணவர் வெங்கடேசன் (52) என்பவர் 10-க்கு மேற்பட்ட கூலியாட்களுடன் சென்று 2 மரங்களை வெட்டி 15 டன் எடையுள்ள மரத்துண்டுகளை 2 டிராக்டர்களில் எடுத்து சென்று செங்கல் சூளைக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்றது தெரியவந்தது.

3-வது மரத்தை வெட்டும் போது தகவலறிந்த கிராமமக்கள் சென்று தடுத்து நிறுத்தி, எருக்கம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஊராட்சி தலைவியின் கணவரும், கூலி ஆட்களும் தப்பியோடி விட்டனர்.இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் துறையினருக்கும், பேரணாம்பட்டு போலீசாருக்கும் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் ஆகியோர் வெங்கடேசன் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தாக வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story