மது அருந்துவதை கண்டித்தவரை பீர் பாட்டிலால் தாக்கியவர்கள் மீது வழக்கு

மது அருந்துவதை கண்டித்தவரை பீர் பாட்டிலால் தாக்கியவர்கள்  மீது வழக்கு
X

காரைக்குடி காவல் நிலையம் 

தனது தோட்டத்தில் மது அருந்தியதை கண்டித்த விவசாயியை பீர் பாட்டிலால் தாக்கிய இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்குடி எஸ்ஆர்எம் தெருவை சேர்ந்தவர் ராமன். இவரது தோட்டம் காரைக்குடி தெற்கு தெருவில் உள்ளது. அத்தோட்டத்தில் கல்யாணி நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சூர்யா மற்றும் நவீன் ஆகிய இருவரும் மது அருந்திக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை ராமன் கண்டித்த நிலையில் இருவரும் அவரை பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் காரைக்குடி தெற்கு போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


Tags

Next Story