பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது வழக்குப் பதிவு

பொது இடத்தில் மது அருந்திய 13 பேர் மீது வழக்குப் பதிவு
X

காவல் நிலையம் 

கள்ளக்குறிச்சி உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் தினமும் நடைபெறும் வாகன விபத்து, வழிப்பறி, திருட்டு, தகராறு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் பெரும்பாலும் மது அருந்துபவர்களால் நடக்கிறது. அதனைத் தடுக்கும் பொருட்டு போலீசார் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அப்போது, பொது இடத்தில் மது அருந்தும் நபர்கள் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கின்றனர். அதன்படி, கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் நேற்று முன்தினம் பொது இடத்தில் மது அருந்தியது தொடர்பாக, தியாகதுருகத்தில் 2 பேர், கீழ்குப்பத்தில் 2 பேர், கச்சிராயபாளையத்தில் 2 பேர், கள்ளக்குறிச்சியில் 3 பேர், வரஞ்சரத்தில் 3 பேர், சின்னசேலத்தில் ஒருவர் என மொத்தம் 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story