சிவகாசியில் 4 பேர் மீது வழக்கு பதிவு

சிவகாசியில் 4 பேர் மீது வழக்கு பதிவு
சிவகாசியில் 4 பேர் மீது வழக்கு பதிவு...
சிவகாசியில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் விநாயகர் காலனியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி,இவர் சொந்தமாக டாடா ஏசி வைத்து தொழில் செய்து வருகின்றார். இவரிடம் விஜயகுமார் என்பவர் லோடுமேனாக வேலை பார்த்து வருகின்றார்.லோடுமேன் விஜயகுமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஜயகுமாரை லோடுமேன் வேலைக்கு வைக்க கூடாது என்றுகூறி நாரணாபுரத்தை சேர்ந்த சித்தையபாரதி,வினோத்குமார், அருண்பாண்டியன், ரஞ்சித்குமார் ஆகியோர் தங்கப்பாண்டி வீட்டிற்கு சென்று தங்கப்பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

விலக்கி விட வந்த தங்கப்பாண்டியனின் மனைவி கோகிலாவாணியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த கணவன்,மனைவி இரண்டு பேரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து 4பேர் மீதும் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags

Next Story