தனியார் நிறுவனத்தில் காப்பர் வயர் திருடிய நபர் மீது வழக்கு பதிவு

தனியார் நிறுவனத்தில் காப்பர் வயர் திருடிய நபர் மீது வழக்கு பதிவு
X

திருட்டு

விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் 25000 மதிப்பிலான காப்பர் வயரை திருடிய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் குளோபல் பாலிபேக்கில் போர்மெனாக பணிபுரிபவர் பாலகிருஷ்ணன். இவர் பணிபுரியும் நிறுவனத்தில் 60 அடி நீளம் உள்ள பூமியில் இணைக்கும் காப்பர் வயர் மற்றும் 18 கிலோ எடையுள்ள 12 மேன்டல் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அங்கு உள்ள சிசிடிவி பதிவுகளை பார்வையிட்ட பொழுது அந்த நிறுவனத்தில் பணிபுரியும் முத்தால் நகரை சார்ந்த கார்த்திக் என்பவர் அதை திருடியது தெரியவந்தது. இதை அடுத்து அந்த சிசிடிவி காட்சியுடன் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய ஊரக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story