ஆறு ஆசிரியர்கள் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு

ஆறு ஆசிரியர்கள் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு

அரசு பள்ளி மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டல் விவகாரத்தில் ஆறு ஆசிரியர்கள் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அரசு பள்ளி மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் சீண்டல் விவகாரத்தில் ஆறு ஆசிரியர்கள் மீது போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் பேரூர் அனைத்து மகளீர் காவல் நிலையில் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.அதில் தான் 8ம் வகுப்பு படித்த போது உடற்கல்வி ஆசிரியர் தன்னிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.இதனை தொடர்ந்து அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ பிரிவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் இந்த சம்பவத்தை மறைக்கும் வகையில் வெளியில் சொல்லக்கூடாது என மாணவியை மிரட்டிய ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க கூடாது என மாணவர்கள் ஒரு தரப்பினர் போராட்டம் மேற்கொண்டனர். ஆனால் ஆசிரியர்கள் மீது வழக்கு பதிய வேண்டும் என மாணவி தரப்பில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உடற்கல்வி ஆசிரியருடன் பணியாற்றும் சக ஆசிரியர்கள் ஜீவஹாட்சன்,ரேகா,சாரதா,அந்தோணி சிரிய புஸ்பம்,சண்முகதாய், ஆகியோர் மீது கடந்த மாதம் போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுதகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது கடந்த மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் அவர்கள் மீது காவல்துறையோ அல்லது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.ஒரே பள்ளியில் பணியாற்றும் 7 ஆசிரியர்கள் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story