நகை பணம் கேட்டு மனைவியை துரத்திய கணவர் மீது வழக்கு பதிவு

நகை பணம் கேட்டு மனைவியை துரத்திய கணவர் மீது வழக்கு பதிவு

காவல்துறை விசாரணை

காதல் மனைவியை துரத்திய கணவர் மீது வழக்கு பதிவு
விழுப்புரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 33). இவருடைய மனைவி ராஜலட்சுமி (32). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 29.5.2017 அன்று திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.ராஜா, விழுப்புரத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாள ராக பணியாற்றி வருகிறார். இவர் அதே கடையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த்தாக கூறப்படுகிறது.இதையறிந்த ராஜலட்சுமி, தனது கணவர் ராஜாவிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த ராஜா, ராஜலட்சு மியை திட்டி தாக்கினார். மேலும் ராஜலட்சுமியிடம் 5 50 பவுன் நகை-பணம் வாங்கி வரும்படி கேட்டு அவரது மாமியார் லட்சுமி, கொழுந்தனார் சவுந்தர் மற்றும் ராஜா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே செல்லும்படி திட்டியதோடு அவரை நன்னாடு கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜலட்சுமி, விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.இப்புகாரின்பேரில்ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story