தேர்தல் விதிமுறைகள் மீறிய பாமகவினர் மீது வழக்கு பதிவு...
வழக்குப் பதிவு
பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்சி கொடியினை கட்டிய பாமகவினர் மீது கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பேருந்து நிலையத்தில் கடந்த 10-ந் தேதி தேசிய கூட்டணி தர்மபுரி தொகுதி பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்வதற்கு அனுமதி பெறப்பட்டது. இதற்காக, 9-ந்தேதி மாலை தேர்தல் விதிமுறைகளை மீறி பாமக கட்சி கொடிகளை பா.ம.க.வினர் கட்டி கொண்டிருந்தனர். இந்த தேர்தல் விதிமீறல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் சதாசிவம் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் பா.ம.க.வினர் 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story