சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு

சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு

காவல்துறை

விருதுநகர் அருகே காமராஜபுரம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவர் மீது வழக்கு பதிவு
விருதுநகர் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஷ்குமார். இவர் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காமராஜபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அங்கு செல்வம் என்பவர் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற பொழுது காவல்துறையினரை பார்த்த செல்வம் அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. அங்கு இருந்த பத்தாயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் செல்வத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story