வாலிபரை தாக்கி மிரட்டியவர் மீது வழக்கு பதிவு

வாலிபரை தாக்கி மிரட்டியவர் மீது வழக்கு பதிவு

கைது

கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் பகுதியில் நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த உரிமையாளர் மீது வழக்குபதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னசேலம் அடுத்த பி.அகரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், 36; இவர் வி.அலம்பளம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன் என்பவருக்கு சொந்தமான நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். உடல்நிலை சரியில்லாததால் வெங்கடேஷ் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதனால் ராமநாதன் கடந்த மார்ச் 25ம் தேதி வெங்கடேஷின் வீட்டிற்குச் சென்று அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story