சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு
காவல்துறை விசாரணை
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுமியை திருமணம் செய்தவர் மீது வழக்கு பதிவு.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த பொன்ராஜ் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சிறுமி ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.அவர் தற்பொழுது 2 மாத கர்ப்பிணியாக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்து தகவலறிந்த களக்காடு யூனியன் விரிவாக்க அலுவலர் பொன் விஜயராணி நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பொன்ராஜ் மீது போக்சோ சட்டத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story