குடும்ப பிரச்சினை காரணமாக தாயை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு
காவல்துறை வழக்கு பதிவு
விருதுநகர் பெரியவள்ளிக்குளம் பகுதியில் குடும்ப பிரச்சினை காரணமாக தாயை தாக்கிய மகன் மீது வழக்கு பதிவு
விருதுநகர் பெரியவள்ளிக்குளம் பகுதியைச் சார்ந்தவர் கலா இவருடைய கணவர் முருகன் இவருடைய மூத்த மகன் சங்கர் கணேஷ்,அவர் அவருடைய மனைவியுடன் அங்கு வசித்து வருவதாக கூறப்படுகிறது. சங்கர் கணேஷ் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து வந்ததாகவும் இதனால் குடும்பத்தில் அடிக்கடி சண்டை போடு ஏற்பட்டது வந்ததாகவும் கூறப்படுகிறது. கலா தனது மகன் சங்கர் கணேஷ் வேலைக்கு செல்லுமாறு அறிவுரை வழங்கியதால் வீட்டில் சண்டை ஏற்பட்டதை அடுத்து கலா தனது அண்ணன் வீட்டிற்கு சென்றதாகவும் மறுநாள் காலை அண்ணன் வீட்டிற்கு சென்று விட்டு வரும் வழியில் கலாவை பார்த்த மகன சங்கர் கணேஷ் தகாத வார்த்தையில் பேசி திட்டி தாக்கியதாகவும் அங்கு வந்த சங்கர் கணேசன் தந்தை முருகனையும் அவர் தகாத வார்த்தையில் பேசி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த கலா விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிகிச்சை பெற்று விட்டு நடவடிக்கை எடுக்க கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story