செஞ்சி காவலரை தாக்கிய 4பேர் மீது வழக்கு பதிவு
கைது செய்யப்பட்டவர்கள்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் ரங்கநாதன் திருக்கோவில் காணும் பொங்கலையொட்டி சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களும் சாமி தரிசனும் செய்ய சென்ற நிலையில் அங்கிருந்த சிங்கவரம் கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கும் செஞ்சியை சேர்ந்த இளைஞர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த வாய் தகராறு கைகலப்பாக மாறிய நிலையில் இதனைப் பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் செஞ்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அடிப்படையில் விரைந்த செஞ்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் விசாரணை மேற்கொண்டு இருந்தபோது உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை சிங்கவரம் சேர்ந்த இளைஞர்கள் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை காக்கி சீருடைய பிடித்து தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அளித்த புகாரின் அடிப்படையில் புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் பார்த்தசாரதி உதவி ஆய்வாளரை தாக்கிய ராஜதேவன்,எழிலரசன், கவியரசு, இளமதிவாணன்,உள்ளிட்ட 4 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இளைஞர்களிடையே ஏற்பட்ட கை கலப்பை விசாரணை மேற்கொண்ட சென்ற உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம் காவலர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.