சேலத்தில் வாலிபர் கொலை வழக்கு

சேலத்தில் வாலிபர் கொலை வழக்கு

சேலத்தில் வாலிபர் கொலை வழக்கு

சேலத்தில் அண்ணன் தம்பி இடையே தகராறில் அண்ணன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் வீராணம் பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 29). அவரது தம்பி நவீன்குமார். இவர் கடந்த சில நாட்களுக்கு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். இதனிடையே அங்கு வந்த கோபியும் அவர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அப்போது அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நவீன்குமார், அண்ணன் கோபியை கட்டையால் தாக்கினார். கீழே விழுந்த அவரை மேலும் சிலர் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த கோபி பரிதாபமாக இறந்தார். இந்த கொலை குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமார் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த விஜயகுமார் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags

Next Story