சிறுமியை பின்தொடர்ந்தவர் மீது 'போக்சோ' சட்டத்தில் வழக்கு
போக்சோவில் கைது
கள்ளக்குறிச்சி அருகே பள்ளி சிறுமியை பைக்கில் பின் தொடர்ந்த நபர் மீது, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், கடந்த 3ம் தேதி பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்றார். அப்போது, குமார் மகன் வேலுமணி என்பவர் பைக்கில், சிறுமியை பின்தொடர்ந்து வந்துள்ளார். இது குறித்து சிறுமி அவரது பாட்டியிடம் கூறியுள்ளார். வெளியூரில் பணிபுரிந்த சிறுமியின் தந்தை ஓட்டளிக்க கடந்த 19ம் தேதி சொந்த ஊருக்கு வந்தார். அப்போது மகளை பின் தொடர்ந்து வந்தது குறித்து சிறுமியின் தந்தை, வேலுமணியிடம் கேட்டார். இதனால், வேலுமணி தரப்பினர் சிறுமியின் தந்தையை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில், வேலுமணி மீது 'போக்சோ' சட்டத்திலும், வேலுமணி தரப்பைச் சேர்ந்த குப்புசாமி, பாண்டியன், குமார், ராஜசுலோச்சனா, கோவிந்தம்மாள் ஆகிய 5 பேர் மீது தாக்கியும், மிரட்டல் விடுத்ததாகவும் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
Next Story