மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி வீட்டை உடைத்துக் கொள்ளை

மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி வீட்டை உடைத்துக் கொள்ளை
பைல் படம்
சுசீந்திரம் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் அதிகாரி வீட்டை உடைத்துக் கொள்ளை அடிக்கபப்ட்டுள்ளது.

குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே வடக்குதெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் திருநாவுக்கரசு. இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். வீட்டை ராதாகிருஷ்ணன் பராமரித்து வருகிறார்.

கடந்த 18ஆம் தேதி ராதாகிருஷ்ணன் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின் பக்கத்தில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அங்குள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது.

மேலும் பீரோவில் இருந்த ஐந்து பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது. இது தவிர வீட்டில் வைத்திருந்த உண்டியல் பணம் ரூபாய் 20 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து, அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story