சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் விழா
உதவும் கரங்கள் சார்ப்பில் போர்வை வழங்கும் விழா
செய்யாறு நகரத்தில் இரவு நேரத்தில் கடும் குளிரில் வாடும் சாலையோரங்களில் உறங்குகின்ற ஏழை எளியோருக்கு குளிரிலிருந்து பாதுகாக்க உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைவர் தி.எ.ஆதிகேசவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்.மோகன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து வேதபுரீஸ்வரர் திருக்கோயில் முன்புறம், மார்கெட், மண்டிவீதி, சாவடிதிடல், பஸ்நிலையம் உட்புறம், வெளிபுறம், ஆரணி கூட்டுசாலை, பைபாஸ், காந்திசாலை வழியாக ஆதிபராசக்தி ஆலயம் வரை சாலையோரங்களில் உறங்கிக்கொண்டு இருந்தவர்களுக்கு போர்வை வழங்கப்பட்டது.
நிகழ்வில் பொருளாளர் சி.ரவிபாலன், துணைத்தலைவர் க.வள்ளிகாந்தன், துணைசெயலாளர் ப.சிவனாந்தகுமார், மனவளக்கலை பெருமாள், ஜி.ஆனந்தன், பரசுராமன், சிங்காரவடிவேல், சக்திநாராயணன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சேவைப்பணிகளை செய்தனர். 100 போர்வைகளை நவலடி நிதி லிமிடெட் பங்குதாரர் வி.குமரேசன் வழங்கினார்.