அரூரில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.MRK.பன்னீர்செல்வம் முன்னிலையில் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி ஐஏஎஸ் தலைமையில் அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் 1 லட்சம் பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பயனாளிகளுக்கு பட்டா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கி தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை 282608 பயனாளிகளும், 13536 புதுமை பெண் மேலும் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 பெறுகின்றனர்.
மற்றும் மகளிர் விடியல் பயணம் மூலம் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர் உள்ளிட்ட திட்டங்களை விளக்கி சிறப்புரை ஆற்றினார். உடன் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம்.சுப்ரமணி , தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் மற்றும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் Dr.S.செந்தில்குமார் MP, மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.